என் இனிய இயந்திரா - ஒருநாள் காலேஞ்-ல கிளாஸ் கட் அடிச்சுட்டு என்ன பண்றதுனு தெரியாம லைப்ரரி ல சும்மா உக்காந்திருந்தேன் . எவளோ நேரம் தான் சும்மா உக்காரா முடியும்.. என்ன தான் இருக்கு இந்த புக் ல லாம் னு பாக்க தமிழ் புக்ஸ் எ எட்டி பாத்தேன்... அதுல கண்ணுல பட்ட புக்கு தான் "என் இனிய இயந்திரா - சுஜாதா " இந்த புக்க படிச்ச எல்லார்க்கும் இதோட அருமை நல்லாவே தெரியும்.. சுஜாதா...! 1920 இல் 2020 இல் நடக்கும் அறிவியல் கலந்த காதல் கதை.
நான் அந்த புத்தகத்தை கையில் எடுத்த நாள் முதல் இன்று வரை.. "என் இனிய இயந்திரா " போல் ஒரு கதையை படித்ததில்லை. இனியும் படிக்கச் போவதில்லை.. எனக்குள் இருக்கும்கும் அந்த சுஜாதாவின் அறிவியல் கதைகளுக்கான பசி.. என்னையும் எழுத தூண்டுகிறது..
இதை படிக்கும் நீங்கள் 80s கிட்ஸ் ஆகா OPஇருக்கலாம் , 90s கிட்ஸ் ஆகா இருக்கலாம்..20s கிட்ஸ் ஆகா இருக்கலாம்...யாராக வேண்டுமானால் இருக்கலாம்... உங்களின் எதிர்காலம்.. சுமார் 100 வருடத்திற்கு பிறகு... உங்கள் வீட்டிற்குள் உங்களை அழைத்து செல்லும் ஒரு சிறிய முயற்சியே "ஹாப்பி நியூ இயர் 2120".
HAPPY NEW YEAR 2120...!
SESSION 1
EPISODE 1
Hydrocarbon களஞ்சியம் - தஞ்சாவூர்
டிசம்பர் 31 , 2119 , இடம் . நேரம் மாலை ஆறு மணி.
எப்ப பாத்தாலும் லேட்.. என்னைக்காச்சும் ஒரு நாள் சீக்ரம் டைம்க்கு வந்துருக்கியா... எப்ப தான் வருவ... என்று தன வலது காதில் ஒற்றை விரலை ஒற்றி வைத்து காதலனிடம் உரையாடி கொண்டிருந்தாள், யாழினி. (காதில் அலைபேசி இல்லை.) இப்பொது எல்லாம் பிறந்த உடன் அவர்கள் வசதிக்கு ஏற்ப மூளையில் சிம் கார்டு பிட் செய்ய படும். அதிலும், lifetime பிரீ data , மன்தீலி பிளான் , yearly பிளான் என நம் தேவைக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். பல வகை பிளான்ஸ் இருக்கும். யாழினி மண்டையில் இருப்பது என்னவோ yearly பிளான் தான். ஆள் காட்டி விரலை காதில் வைத்து பேச வேண்டிய நபரின் பெயரை சொன்னால் கால் கன்னெட் ஆகிவிடும்..
மறுமுனையில் வர வழி ல டிராபிக் டா தங்கம்...! என்று முப்பாட்டன் காலத்து பொய் ஒன்றை கூறி சமாளிக்க பார்த்தான் நம் நாயகன் மதன்.
90 வினாடிகள் காத்திருப்புக்கு பின், யாழினி யின் ரெட்டினா, மூளைக்கு மதன் வரும் சிக்னல்-ஐ அனுப்பி, திட்ட வேண்டிய வார்த்தைகளை வாயிற்கு அனுப்பியது..
மதன்: சாரி யாழ் ..! வர வழில ட்ராபிக்.
யாழினி : பொய் சொல்லாதடா... இந்த இருக்குற டெல்லி ல இருந்து இங்க இருக்குற சென்னை வாரத்துக்கு உனக்கு 30sec பத்தாதா .......
மதன் : இல்ல டா .. என்னோட டெலிபோர்ட்டர் வேலை செய்யல.. என் friend ஓடாது எடுத்துக்கிட்டு வந்துருக்கேன் டா. அதுனால தான் 60sec லேட் ஆகிருச்சு
(டெலிபோர்ட்டர் நவீன காலத்து ட்ரான்ஸ்போர்ட்டேஷன் . அச்ச ரேகை தீர்க்க ரேகை என்னை அழுத்தி கோ பட்டன் எ அழுத்தினாள் அமெரிக்கா வ இருந்தாலும் அண்டார்டிகா வா இருந்தாலும் 30 sec தான். )
பேசி கொண்டு இருக்கும் பொழுது மதனின் உள்ளங்கையில் சிகப்பு நிற ஒளி இரு முறை பீப் பீப் என்று அடித்தது..
அதன் மெசேஜ் வந்துருகல எடுத்து பாக்க வேண்டியது தானே என்று யாழினி கத்திக்கொண்டு இருந்தால்..
சாரிடா வைப்ரஷன் மோடு ல வச்சுருக்கேன் .. அதன் பாக்கல.. என்று சொல்லிய வண்ணம், டிஜிட்டல் மயம் ஆக பட்ட தன் "AMOLED உள்ளங்கையை" பார்த்தான். TRANSPERANT நானோ செல்ஸ் ஆள் ஆனா ஒரு நவீன AMOLED தோடு திரை உள்ளங்கையில் EMBED செய்யப்பட்டு இருந்தது. WALLPAPER-ல் யாழினி..
பெயர் தான் தோடு திரை. தொட தேவை இல்லை. கருவிழி ஸ்கேன் செய்ய பட்டு இருக்கு,. கண் அசைவிற்கு எட்டாற்போல் அனைத்து செயலும் செய்யும்...
யாழினி: எனக்கு பசிக்குது ஏதாச்சும் சாப்பிட போலாமா..!
மதன்: போலாமே .. எங்க போலாம்..BELGIAN WAFFLES சாப்பிடலாமா..!
யாழினி: பெல்ஜியம் போயிடு வர எவளோ நேரம் ஆகும்.. !
மதன் : பெல்ஜியம் போக ஒரு 10 sec வர ஒரு 10 sec .
யாழினி : உன் வண்டில HC இருக்கா? (HYDRO CARBON சுருக்கம் HC)
மதன் : போற வழில தஞ்சாவூர் ல FUEL ஸ்டேஷன் இருக்குல்ல அங்க FILL பண்ணிரலாம்..! அதும் இல்லாம அங்க தான் HC MANUFACTUING , so மத்த இடத்தை விட இங்க ரொம்ப மலிவா கிடைக்கும்..
யாழினி: ச்சீய் .. நா வரல நீயே பொய் அங்க HC FILL பண்ணிட்டு வந்துரு..அந்த ஊர் பக்கம் போகவே எனக்கு சுத்தமா புடிக்கல..! ரொம்ப கேவலமான ஸ்மெல் , எங்க பாத்தாலும் HC கிணறு , அதும் இல்லாம அந்த ஊர்ல AIR POLLUTION RATIO ரொம்ப ஜாஸ்தி.. என் OXYGEN சிலிண்டர் வேற இன்னும் UPGRADE பண்ணனுமா இருக்கேன். அங்க வந்தா ரொம்ப கஷ்டம். ரேடியேஷன் வேற அதிகமா இருக்கும் என்னோட SUIT வேற ஓல்ட் மாடல்.
மதன் : சரி சரி ரொம்ப பயப்படாத..! எனக்கும் அந்த ஊர் சைடு போக சுத்தமா புடிக்காது. ஊரா அது...கருமம். எப்படி தான் அங்க HC minning பண்றவங்கள்லாம் இருக்காங்களோ.. அந்த ரேடியேஷன் ல .. அந்த ஸ்மெல் ல.. இமாஜினே கூட பண்ண முடில அந்த ஊர்ல எப்படி வால்ராங்களோ..AUTO FILLING மோட் ல போடறேன் . நம்ப ரெஸ்ட் எடுப்போம் இங்கயே கொஞ்ச நேரம்.
(மதன் தான் டெலிபோர்ட்டர் ல தஞ்சாவூர் டாட்டா செட் பண்ணி , ஆட்டோ பைலட் மோட் ஒன பண்ணி, "HC FILLING " என்று கட்டளை இட்டான். )
அந்த டெலிபோர்ட்டர் மின் இயங்கி. தானாக மனிதர்கள் செல்ல இயலாத , மனிதர்கள் செல்ல தடை விதிக்க பட்ட, மிகவும் விச வாய்வுக்கள் உள்ள அந்த HC FILLING ஸ்டேஷன் "Hydro-carbon களஞ்சியம் - தஞ்சாவூர் " நோக்கி புறப்பட்டது..